உலக பாரா தடகளம்: தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார்

இந்த போட்டியில் 104 நாடுகளைச் சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
புதுடெல்லி,
மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 5-ந் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 104 நாடுகளைச் சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க நாளில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் (டி63 பிரிவு) இந்திய வீரர் சைலேஷ் குமார் 1.91 மீட்டர் உயரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பீகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான சைலேஷ் நடப்பு தொடரில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
Related Tags :
Next Story






