உலக பாரா தடகளம்: தங்க பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த சுமித் ஆன்டில்


உலக பாரா தடகளம்:  தங்க பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த சுமித் ஆன்டில்
x
தினத்தந்தி 30 Sept 2025 11:24 PM IST (Updated: 30 Sept 2025 11:36 PM IST)
t-max-icont-min-icon

2021-ம் ஆண்டு டோக்கியோ மற்றும் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரங்களில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் எப்64 பிரிவில் போட்டியிட்ட இந்தியாவை சேர்ந்த சுமித் ஆன்டில், (வயது 27) 71.37 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன் 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் நடந்த போட்டிகளில், அவர் முன்பே தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து 3-வது முறையாக அவர் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார்.

அவர் 2021-ம் ஆண்டு டோக்கியோ மற்றும் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரங்களில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய பாராலிம்பிக் போட்டியின் நடப்பு சாம்பியனாகவும் அவர் இருந்து வருகிறார்.

1 More update

Next Story