கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

போல் வால்ட் பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்
கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்
Published on

சென்னை

இரண்டு முறை உலக போல் வால்ட் சாம்பியன் சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியது.

இது குறித்து அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி கூறியதாவது;-

சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட மாட்டார்.2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ட்ரிக்ஸ் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.

2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com