உலக ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி; தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல்

அவர் ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், ஆயிரம் மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருக்கிறார்.

உலக ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி; தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல்
Published on: 

அசுன்சியோன்

உலக ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.

பராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் உலக ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், தமிழக ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த் வேல்குமார் தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்தி 3 பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

தங்க பதக்கம்

இதில், ஸ்பீடு ஸ்கேட்டிங் மாரத்தான் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். அவர் ஏற்கனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், ஆயிரம் மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு, இதே விளையாட்டு பிரிவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியனானார். இந்த விளையாட்டு போட்டியில் உலக சாம்பியனான முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று முக்கியத்துவம் பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com