உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஆனந்த்குமார் மீண்டும் தங்கம் வென்று அசத்தல்


உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஆனந்த்குமார் மீண்டும் தங்கம் வென்று அசத்தல்
x

image courtesy:PTI

இவர் ஏற்கனவே 1,000 மீ ஸ்பிரிண்ட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

பெய்ஜிங்,

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற 42 கி. மீ ஸ்கேட் மாரத்தானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த போட்டி தொடரில் இவர் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். இவர் ஏற்கனவே ஒரு தங்கம் (1,000 மீ ஸ்பிரிண்ட் போட்டி) மற்றும் ஒரு வெண்கல பதக்கம் (500 மீ ஸ்பிரிண்ட் போட்டி) வென்றிருந்தார்.

1 More update

Next Story