

லண்டன்,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்ட னில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 64 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள் ளன.
இதில் 7-வது பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் துனிசியாவை தோற்கடித்தது. மனுஷ் ஷா, மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய் ஆகிய இந்தியர்கள் தங்க ளது ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தனர்.