

லண்டன்,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்ட னில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 64 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் 7-வது பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது 2-வது ஆட் டத்தில் சுலோவக்கியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு 3-2 என்ற கணக்கில் சுலோவக்கி யாவை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இந்திய வீரர்கள் மானவ் தாக்கர் 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டார்.
மனுஷ் ஷா ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்தார். ஹர்மீத் தேசாய் தனது ஆட்டத்தில் தோற்றார்.