

லண்டன்,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்ட னில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங் கேற்றுள்ள 64 அணிகள் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான 6-வது பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி 3-வது மற் றும் கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் ருவாண்டாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றதுடன், தனது பிரிவில் முதலி டத்தை சொந்தமாக்கி பிரதான சுற்றுக்குள் நுழைந்தது.