உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் செராவத் தகுதி நீக்கம்.. காரணம் என்ன..?

image courtesy:PTI
ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் அமன் செராவத் களமிறங்க இருந்தார்.
புதுடெல்லி,
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 900 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இந்திய வீரரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான அமன் செராவத் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் களம் இறங்க இருந்தார். இதனையடுத்து போட்டிக்கு முன்பாக வழக்கமான நடைமுறையாக உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவரது உடல் எடை 57 கிலோவுக்கு மேலாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கவுரவமிக்க இந்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட எடைய விட (57 கிலோ) கூடுதலாக 1.7 கிலோ அவர் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story






