உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்
x

image courtesy:PTI

இந்திய அணி தேர்வுக்கான போட்டி லக்னோவில் நடைபெற்றது.

லக்னோ,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக்கான போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான அமன் ஷெராவத் கலந்து கொண்டார். இதில் அவர் தன்னை எதிர்த்த சுமித், ராகுல் உள்ளிட்டோரை எளிதில் வீழ்த்தி இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

இதேபோல் தங்கள் எடைப்பிரிவுகளில் வெற்றி பெற்ற உதித், சன்னி குமார், சுஜீத் கல்கல், அனில், ரோகித், ஜெய்தீப், அமித், முகுல் தாஹியா, தீபக் பூனியா, விக்கி, ரஜத் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

1 More update

Next Story