

போபால்,
பிரபல மல்யுத்த வீரர் தலீப் சிங் ராணா. ரசிகர்களால் கிரேட் காளி என்றும் அழைக்கப்படும் இவர் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இணையும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். ஆனால் வருங்காலம் பற்றி எதுவும் கூற முடியாது. ஏனெனில் காலையில் இருந்து மாலை வரை பருவநிலை கூட மாறுபடுகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மல்யுத்த போட்டி நடத்தப்படுவது பற்றி பேசிய அவர், முதல் மந்திரி சவுகான் மாநிலத்தில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வருகிறார்.
எங்களது சந்திப்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. எனது வேண்டுகோளுக்கு ஏற்ப, மல்யுத்த போட்டியை மாநிலத்தில் வளர்ச்சி அடைய செய்ய அனைத்து உதவிகளையும் செய்வேன் என அவர் என்னிடம் உறுதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.