மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நீண்ட கால உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
image courtesy; PTI
image courtesy; PTI
Published on

புதுடெல்லி,

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகளும் இன்றே வெளியிடப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றுள்ளார். சஞ்சய் சிங் 12 ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நீண்டகால உதவியாளர் ஆவார்.

முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது சில மல்யுத்த வீராங்கனைகள்  பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சர்ச்சை எதிரொலியாக மல்யுத்த சம்மேளனத்தின் பணிகளில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். ஆனாலும் தனது விசுவாசிகள் மூலம் முக்கிய பதவிகளை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், இன்று நடைபெற்ற தேர்தலில் அவருக்குப் பின் தலைமைப் பதவிக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும், மல்யுத்த வீராங்கனையுமான சாக்ஷி மாலிக், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறு முறை பாஜக எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திருமதி மாலிக் உள்பட உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து அவர் ஒதுங்க வேண்டியிருந்தது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 47 வாக்குகளில் 40 வாக்குகளை சஞ்சய் சிங் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ஷியோரன் வெறும் ஏழு வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com