ஜூரிச் டையமண்ட் லீக் 2023; ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜூரிச் டையமண்ட் லீக் 2023 ஈட்டி எறிதல் போட்டியில் 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்துள்ளார்.
ஜூரிச் டையமண்ட் லீக் 2023; ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்
Published on

ஜூரிச்,

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில், நடப்பு ஆண்டுக்கான ஜூரிச் டையமண்ட் லீக் 2023 போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

அவர், முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தபோதும், அடுத்து 2 முறை தவறுதல் ஏற்பட்டது. 4-வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த சோப்ரா, 5-வது முயற்சியில் மீண்டும் தவறிழைத்தது போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தியது.

இறுதி முயற்சியில் அவர் 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து போட்டி நிறைவடையும் வரை அவர் தனது 2-வது இடத்தில் நீடித்து அதனை தக்க வைத்து கொண்டார்.

இதேபோன்று, ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரரான முரளி ஸ்ரீசங்கர் (7.99 மீட்டர்) 5-வது இடம் பிடித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com