இந்திய தொடரில் இருந்து ரபடா விலகல்

இந்திய தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்கா வீரர் ரபடா விலகி உள்ளார்.
Published on

கேப்டவுன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, இந்தியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் (மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை) இருந்து விலகியிருக்கிறார்.இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என்று தென்ஆப்பிரிக்க மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே வருகிற 29-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரபடா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.





X

logo
Daily Thanthi
www.dailythanthi.com