ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம்

ரஞ்சி இறுதிப்போட்டியில் விதர்பா அணி தடுமாறி வருகிறது.
Published on

நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி சொந்த ஊரில் தடுமாறியது. நட்சத்திர வீரர்கள் கேப்டன் பைஸ் பாசல் (16 ரன்), வாசிம் ஜாபர் (23 ரன்) ஏமாற்றம் அளித்தனர். நிதானமாக ஆடிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com