சவுராஷ்டிரா அணியில் இருந்து விலகினார், ஜாக்சன்

சவுராஷ்டிரா அணியில் இருந்து ஷெல்டன் ஜாக்சன் விலகியுள்ளார்.
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா முதல்முறையாக மகுடம் சூடியதில் ஜாக்சனின் பங்களிப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர் 10 ஆட்டத்தில் 809 ரன்கள் குவித்து இருந்தார். எனது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக வேறு சில அணிகளுக்கு இடம் பெயர்வதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ள 33 வயதான ஜாக்சன் இந்த சீசனில் ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com