பதினாறு ரஷ்ய தடகள வீரர்கள் விளையாட அனுமதி

பதினாறு ரஷ்ய தடகள வீரர்கள் தனிப்பட்ட முறையில் போட்டியில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் அனுமதித்துள்ளது.
Published on

லாசன்னெ (ஸ்விட்சர்லாந்து)

ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷ்யா போட்டிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பதினாறு பேரும் தனிச்சிறப்பான தகுதிகளை பெற்றிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தடை விலக்கம் பெற்றவர்களில் நீளம் தாண்டும் போட்டியின் உலக சாம்பியனான மென்கோவும் அடங்குவார்.

ரஷ்ய வீரர்கள் 150 மேற்பட்டோர் தங்களை தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்படி விண்ணப்பித்துள்ளனர். இதில் 39 மனுக்கள் அனுமதி பெற்றுள்ளன. இதர விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என்று அமைப்பு கூறியுள்ளது. குற்றச்சாட்டுகளில் சிக்காத தூய்மையான விளையாட்டு வீரர்களும் சரி சமமான வாய்ப்புகளை பெற வேண்டும் என்று இம்முடிவு பற்றி கூறினார் சர்வதேச தடகள சம்மேளத்தின் தலைவர் செபாஸ்டியன் கூ. தடை விலக்கம் பெற்றுள்ள வீரர்களின் பங்கேற்பை விளையாட்டை நடத்தும் அமைப்புகளே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com