டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 2-வது குழந்தை

டென்னிஸ் விளையாட்டின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திரமான செரீனா வில்லியம்சுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
image courtesy; instagram/serenawilliams
image courtesy; instagram/serenawilliams
Published on

வாஷிங்டன்,

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு டென்னிசிலிருந்து ஓய்வு அறிவித்தார். இவருக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவருடைய கணவர் அலெக்சிஸ் ஓஹானியன் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

மேலும் செரீனாவும் குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைபடத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பெண் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் என பெயரிட்டிருந்தனர். இரண்டாவது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஒஹானியன் என பெயரிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com