

ஆஸ்திரேலியா ,
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரர் ஆண்டி முர்ரே. 34 வயதாகும் இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.இவர் 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டில் விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டு நடந்த யுஎஸ் ஓபன் போட்டியிலும் இவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
2019 ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலகி இருந்தார். பின்னர் சமீபத்தில் நடந்த முடிந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரிலும் இவர் பங்கேற்க இருக்கிறார்.
தற்போதைய டென்னிஸ் தரவரிசையில் இவர் 134 வது இடத்தில் உள்ளார். இருப்பினும் அவருடைய வாழ்நாள் வெற்றிகளை கருத்தில் கொண்டும் அவருடைய போராடும் குணத்திற்காகவும் அவருக்கு ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ வைல்ட் கார்டு அழைப்பிதழை ஆஸ்திரேலியா ஓபன் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் இவருக்கு வழங்கியுள்ளனர்.
"ஐந்து முறை இறுதிப் போட்டியாளர் ஆண்டி முறைக்கு மெயின் டிரா வைல்ட் கார்டு வழங்கப்பட்டது," என்று ஆஸ்திரேலிய ஓபனின் சிஇஓ கிரேக் டைலே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் 30 வரை நடைபெறுகிறது..