அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை

அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #Argentine
அர்ஜென்டினா டென்னிஸ் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை
Published on

பியூனோஸ் ஏரிஸ்,

அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர், போட்டிகளில் கலந்து கொள்ள ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

25 வயதாகும் அர்ஜென்டினா வீரர் நிகோலஸ் கிக்கர், தரவரிசையில் 78-வது இடம் வரை முன்னேறி உள்ளார். இந்நிலையில் 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஆனால் நிகோலஸ் கிக்கர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணை குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு 6 ஆண்டுகள் விளையாடட்தடை மற்றும் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com