பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் : முதலிடத்தில் நிறைவு செய்தார் ஆஷ்லே பார்டி

இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்ற இவர் மியாமி ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் : முதலிடத்தில் நிறைவு செய்தார் ஆஷ்லே பார்டி
Published on

ஆஸ்திரேலியா

ஒவ்வொரு ஆண்டும் உலக டென்னிஸ் கூட்டமைப்பு அந்தந்த ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் நிறைவு செய்த வீரர் , வீராங்கனைகள் பெயர்களை வெளியிடும். அதன்படி 2021 ஆம் ஆண்டின் இறுதியில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் நிறைவு செய்த வீராங்கனைகள் பெயர்களை நேற்று வெளியிட்டது உலக டென்னிஸ் கூட்டமைப்பு .

அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி முதலிடம் பிடித்துள்ளார்.2021 ஆம் ஆண்டு ஆஷ்லே பார்ட்டிக்கு சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்ற இவர் மியாமி ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

அதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் கேத்ரினா சினியகோவா முதலிடம் பிடித்துள்ளார்.3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இவர் இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் பிரெஞ்சு ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் மற்றொரு செக் வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com