விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்
Published on

லண்டன்,

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர்-1' ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி - செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். மிகவும் பரபரப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது.

ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் ஆஷ்லே பார்டி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆஷ்லே பார்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை ஆஷ்லே பார்டி வென்றிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com