கத்தார் ஓபன் டென்னிசில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

ஆண்களுக்கான கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது.
கத்தார் ஓபன் டென்னிசில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
Published on

தோகா,

வலது முழங்கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓராண்டுக்கு மேலாக ஓய்வு எடுத்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதியில் அவர், தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள நிகோலஸ் பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) சந்தித்தார். இதில் பெடரர் 6-3, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதன் எதிரொலியாக அடுத்த வாரம் தொடங்கும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 39 வயதான பெடரர் விலகி இருக்கிறார். சிறந்த நிலையை எட்டுவதற்கு மீண்டும் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்திருப்பதால் துபாய் ஓபனில் ஆடவில்லை என்று பெடரர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com