ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய ஜோடி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய ஜோடி
x

Image Courtesy: AFP

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி, சகநாட்டு இணையான ஜான்-பேட்ரிக் ஸ்மித் - கிம்பர்லி பிர்ரெல் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-4, 10-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன் மூலம் 3-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் ஜான்-பேட்ரிக் ஸ்மித் - கிம்பர்லி பிர்ரெல் ஜோடியை வீழ்த்திய ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.


Next Story