ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy: AFP
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சீனாவின் சூவாய் ஜாங் உடன் ஜோடி சேர்ந்து களமிறங்கியுள்ளார்.
இதில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, டெய்லர் டவுன்சென்ட் - ஹூகோ நைஸ் இணையுடன் விளையாட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டவுன்சென்ட்- நைஸ் ஜோடி விலகியதால் ஆடாமலேயே போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story