ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
Image Tweet : @AustralianOpen
Image Tweet : @AustralianOpen
Published on

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், சீனாவின் ஷாங்ஜுன்செங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-1,6-1 என முதல் 2 செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 3வது செட் ஆட்டத்தில் ஷாங்ஜுன்செங் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதனால் கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com