ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரொமேனியாவின் எலினா கேப்ரியலாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com