ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜோகோவிச், போட்டியில் 6-3 6-2 6-2 என்ற புள்ளி கணக்கில் மேஸ்திரெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று போட்டி ஒன்றில், உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரரான பிரான்செஸ்கோ மேஸ்திரெல்லியை எதிர்த்து விளையாடினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச், அடுத்தடுத்து செட்களை கைப்பற்றினார். போட்டியில் 6-3 6-2 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். போட்டி முடிந்த பின்னர் பேசிய ஜோகோவிச், பெரிய அனுபவம் இல்லாதபோதும், இத்தாலியின் இளம் வீரர் நல்ல முறையில் செர்வ் செய்து விளையாடினார் என கூறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் 10 முறை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள ஜோகோவிச், அடுத்து 3-வது சுற்றில், சீனாவின் ஷாங் ஜன்செங் அல்லது நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்ஸ்கல்ப் ஆகிய 2 பேரில் ஒருவரை எதிர்த்து விளையாடுவார்.






