ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று நிறைவடைந்தது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல்'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வார காலமாக மெல்போர்ன் நகரில் நடந்து வந்தது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.19 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.18.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் கேத்ரினா சினிய கோவா (செக்குடியரசு)- டெய்லர் டவுன்சென்ட் (அமெரிக்கா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இவர்களுக்கு ரூ.4½ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.


Next Story