ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com