ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். முன்னாள் சாம்பியன் ஷரபோவா, தமிழக வீரர் குணேஸ்வரன் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-3, 6-0 என்ற நேர் செட்டில் ஹூகோ டெலியனை (பொலிவியா) பந்தாடினார். நடால் 2-வது சுற்றில் பெடரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com