

மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர். ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா கஜகஸ்தானை சேர்ந்த ரைபகினாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.