பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்

கோப்புப்படம்
நார்வேயின் கேஸ்பர் ரூட், கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலன் உடன் மோதினார்.
பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story






