பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்


பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, செபாஸ்டியன் பேஸ் (அர்ஜெண்டினா) உடன் மோதினார்.

பார்சிலோனா,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் (ரவுண்ட் ஆப் 16) ஒன்றில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, செபாஸ்டியன் பேஸ் (அர்ஜெண்டினா) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஹோல்கர் ரூனே, அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் பேஸை வீழ்த்திய ரூனே காலிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story