பெர்லின் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்


பெர்லின் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காலிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

பெர்லின்,

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), செக் குடியரசின் கேட்டரினா சினியாகோவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்க முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கேட்டரினா சினியாகோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரைபகினா, பெலாரஸின் அரினா சபலென்கா உடன் மோதுகிறார்.

1 More update

Next Story