பெர்லின் ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட ரைபகினா


பெர்லின் ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட ரைபகினா
x

Image Cortesy: FILE IMAGE / X (TWITTER) / ELENA RYBAKINA

தினத்தந்தி 21 Jun 2025 8:30 AM IST (Updated: 21 Jun 2025 8:31 AM IST)
t-max-icont-min-icon

முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), பெலாரஸின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

பெர்லின்,

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), பெலாரஸின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருந்தே இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-6 (8-6), 3-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ரைபகினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story