டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்

கொரோனா அச்சுருத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகிவருகின்றனர். இதனிடையே பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் மற்றும் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காதது மிகவும் கடினமான முடிவு. நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் கனவாக இருந்தது. ஆனால் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்கலும், என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன், இது எனக்கு நானே எடுக்கும் சரியான முடிவு. எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிஸில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com