டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு போபண்ணா ஜோடி தகுதி

image courtesy:AFP
44 வயதான போபண்ணா இந்த போட்டியில் களம் காண்பது இது 4-வது முறையாகும்.
பாரீஸ்,
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள். கவுரவமிக்க இந்த போட்டிக்கு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
அவர்களுக்கு போட்டியாக இருந்த அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ, நதானியல் லாமோன்ஸ் இணை பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிசில் முதல் சுற்றுடன் வெளியேறியதால், போபண்ணா ஜோடியின் தகுதி உறுதியாகி உள்ளது. 44 வயதான போபண்ணா இந்த போட்டியில் களம் காண்பது இது 4-வது முறையாகும்.
Related Tags :
Next Story






