பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

பிரிஸ்பேன்,

முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டிமிட்ரோவ் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட் ஆட்டத்தில் டிமிட்ரோவ் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்த போது ஜோர்டான் தாம்சன் காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com