பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரினா சபலென்கா, கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பிரிஸ்பேன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இதனால் சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com