பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்

அரினா சபலென்கா (பெலாரஸ்) , உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூகை எதிர்கொண்டார்.
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்
Published on

 பிரிஸ்பேன்,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) , உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூகை எதிர்கொண்டார்.

 பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com