கனடா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் ஜோடி

கோப்புப்படம்
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
டொராண்டோ,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பரி- நீல் ஸ்கப்சி ஜோடி உடன் மோதியது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி 6-3, 6-7 (5-7), 13-11 என்ற செட் கணக்கில் ஜோ சாலிஸ்பரி- நீல் ஸ்கப்சி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.
Related Tags :
Next Story






