கனடா ஓபன் டென்னிஸ்: ரைபகினா அரையிறுதிக்கு தகுதி


கனடா ஓபன் டென்னிஸ்: ரைபகினா அரையிறுதிக்கு தகுதி
x

ரைபகினா காலிறுதியில் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

டொராண்டோ,

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) மோதினர்.

இதில் முதல் செட்டை ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 2-வது செட்டில் கோஸ்ட்யுக் காயமடைந்தார். இதனால் அவரால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை.

போட்டியை மேற்கொண்டு தொடர முடியாத சூழலில் ரைபகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

ரைபகினா அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ உடன் மோத உள்ளார்.

1 More update

Next Story