

சென்னை,
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜிவிஷ்ணுவர்தன் இணை, செம் இல்கெல் (துருக்கி)டானிலோ பெட்ரோவிச் (செர்பியா) ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜிவிஷ்ணுவர்தன் ஜோடி 76 (75), 57, 105 என்ற செட் கணக்கில் செம் இல்கெல்டானிலோ பெட்ரோவிச் இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்ரீராம் பாலாஜி ஜோடி வென்ற 4வது சேலஞ்சர் பட்டம் இதுவாகும். பட்டம் வென்ற இந்திய ஜோடிக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகையுடன் 80 ஏ.டி.பி.புள்ளியும் கிடைத்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 75, 62 என்ற நேர்செட்டில் தென்கொரியா வீரர் டுக் ஹீ லீயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்ப்சன் 61, 76 (75) என்ற நேர்செட்டில் பெட்ரோ மார்டினஸ்சை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் யுகி பாம்ப்ரிஜோர்டான் தாம்ப்சன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.