

சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் முகுந்த் சசிகுமார்- இங்கிலாந்தின் ஜெய் கிளார்க் ஜோடி 7-6(7), 4-6, 13-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் பெலிக்ஸ் கில்-கிரே இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் கலியந்தா பூனச்சா- தாய்லாந்தின் புருச்யா இசரோ இணை 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இந்தியாவின் பிரஜ் வால் தேவ்- நிதின்குமார் சின்ஹா இணையை வெளியேற்றி இறுதி சுற்றை எட்டியது.
ஒற்றையரில் அகஸ்டின் கோம்ப்ஸ் (அர்ஜென்டினா), காஸ்னி காவ்ஸ்கி (போலந்து), இலியா சிமாகின் (ரஷியா), பெரைரா சில்வா (போர்ச்சுகல்) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர்.