சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்


சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் கூட்டணி ஜான் லாக் (ஜிம்பாப்வே)- ரியோ நோக்குச்சி (ஜப்பான்) இணையுடைன் மோதியது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய்பிரசாந்த் கூட்டணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதே போல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ரஷியாவின் இகோர் அகாபோனோவ்- எவ்ஜெனில் துர்னெவ் இணையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

1 More update

Next Story