சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி) - ஹங்கேரியின் பேபியன் மரோஸ்ஸான் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பேபியன் மரோஸ்ஸானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com