சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy:twitter/@CincyTennis

இவர் 4-வது சுற்றில் பிரான்செட்டி உடன் மோதினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலி வீராங்கனை லூசியா பிரான்செட்டி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

1 More update

Next Story