சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

டெய்லர் பிரிட்ஸ் டேனியல் மெரிடாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனியல் மெரிடாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் டியானே பேரியை (பிரான்ஸ்) வீழ்த்தி முதல் வீராங்கனையாக காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com