சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு தகுதி
x

image courtesy:twitter/@CincyTennis

அல்காரஸ் 2-வது சுற்றில் டாமிர் ஜும்ஹூர் உடன் மோதினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), போஸ்னியாவின் டாமிர் ஜும்ஹூர் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றிய நிலையில் 2-வது செட்டை டாமிர் ஜும்ஹூர் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 6-1, 2-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 3-வது சுற்றில் ஹமாத் மெட்ஜெடோவிக் உடன் மோத உள்ளார்.

1 More update

Next Story